துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட ஆறு வயது சிறுமி -சுழிபுரத்தில் பயங்கரம்- - Yarl Thinakkural

துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்ட ஆறு வயது சிறுமி -சுழிபுரத்தில் பயங்கரம்-


சுழிபுரம் - காட்டுப்புலம் பகுதியில் கிணறு ஒன்றுக்குள் ஆறு வயதுச் சிறுமி  நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டார்.

மாணவியின் கழுத்தில் காயங்கள் காணப்படுகின்றன. அவர் அணிந்திருந்த தோடு காணமல் போயுள்ளது.

இந்நிலையில் இவர் கழுத்து நெரித்தக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

சுழிபுரம் - காட்டுப்புலம் அ.த.க. பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்கும்  சிவநேஸ்வரன் றெஜினா என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்டார்.

பாடசாலை முடிந்து நேற்று வீட்டிற்கு வந்த பின்னர் பாடசாலைச் சீருடையுடன் சிறுமி காணாமற்போனதாக உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளளர்.

சம்பவ நேரம் சிறுமியின் தாயும் தந்தையும் கூலி வேலைக்காக வெளியே சென்றிருந்தனர். தகவல் அறிந்;து சம்பவ இடத்திற்கு வந்த வட்டுக்கோட்டை பொலிஸார் மற்றும் தடய அறிவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் நேற்று இரவு 7.00 மணியளவில் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டார்.

சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கென அப்பகுதியைச் சேர்ந்த 04 பேர் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் தற்போது கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Previous Post Next Post