நடிகர் விஜய் மீது பொலிஸில் புகார் - Yarl Thinakkural

நடிகர் விஜய் மீது பொலிஸில் புகார்

நடிகர் விஜய் “சர்கார்” படத்தின் இயக்குநரிடம் பேசி சிகரெட் காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வழக்கறிஞர் தமிழ்வேந்தன் புகார் கொடுத்துள்ளார்.

பொலிஸ் ஆணையர் அலுவலகத்து சென்றே அவர் நடிகர் விஜய் மீது புகார் கொடுத்துள்ளார்.

வழக்கறிஞர் இது குறித்து கூறுகையில், புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. புகையிலை பொருள்களால் புற்றுநோய் ஏற்படுகிறது.

இதனால் புகையிலை பொருட்களை விளம்பரம் செய்ய தடை உள்ளது. பல கொலை, கொள்ளைகளுக்கு சினிமா முக்கிய காரணமாக இருந்து வருகிறது.
பொதுவாக சினிமா நடிகர்களை பலர் தங்களின் ரோல் மொடலாக பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் “சர்கார்” படத்தின் போஸ்டரில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

இது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்க்கும் ஏராளமான இளைஞர்கள் சிகரெட் பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே இக்காட்சியை நீக்க இயக்குநரிடம் விஜய் பேச வேண்டுமென தெரிவித்தார்.

Previous Post Next Post