முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருத்துவமனையில் - Yarl Thinakkural

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருத்துவமனையில்

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், பா.ஜ.க.வின் முதுபெரும் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் (வயது-94) உடல்நலக்குறைவால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை, பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்துள்ளனர்.

அவருக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறியளவில் மூச்சுத் திணறலும் இருப்பதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வாஜ்பாயின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் சென்று வாஜ்பாயின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

Previous Post Next Post