:"காலா" வெளியாவதை தடுக்க முடியாது - Yarl Thinakkural

:"காலா" வெளியாவதை தடுக்க முடியாது

காலா படத்துக்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் படத்துக்கு எதிராக யார் போராடினாலும், படம் கண்டிப்பாக வெளியாகும். அதை யாரும் தடுக்க முடியாதென நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் ரஜினி படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை படத்துக்கு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் காலா விவகாரம் குறித்து பேசிய பிரகாஷ் ராஜ், பொழுது போக்குக்காக எடுக்கப்படும் திரைப்படத்தையோ அல்லது ஒரு கலையையோ சமூக பிரச்சினையை சுட்டிக்காட்டி எதிர்ப்பது சரியல்ல. ஒரு பொதுவான பிரச்சினையை சுட்டிக் காட்டி சட்டத்தை கையில் எடுப்பது தவறு.

இந்த விவகாரத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அரசு உறுதியளிக்க வேண்டும். படத்துக்கு எதிராக போராடினாலும், காலா படம் வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது. படத்தை வெளியிடுவதற்கு கர்நாடக வர்த்தக சபை தடை கோரவில்லை. விநியோகஸ்தர்களின் அழுத்தம் காரணமாகவே படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Previous Post Next Post