மதுபான தயாரிப்பில் கோகோ கோலா - Yarl Thinakkural

மதுபான தயாரிப்பில் கோகோ கோலா

உலகின் புகழ் பெற்ற குளிர்பான தயாரிப்பு நிறுவனமான கோகோ கோலா தற்போது மதுபான தயாரிப்பிலும் இறங்கியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து இயங்கி வரும் கோகோ கோலா உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வருகிறது.
இந்நிலையில் கோகோ கோலா நிறுவனம் முதன்முறையாக மதுபானத்தை அறிமுகம் செய்துள்ளது. ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து கோகோ-கோலா நிறுவனம் மதுபான விற்பனையை ஆரம்பித்துள்ளது.

லெமன்-டோ என்ற இந்த மதுபானம் எலுமிச்சையின் சுவையுடன் கூடிய மதுபானமாகும். அதில் அல்கஹோலின் அளவு 3 முதல் 7 சதவீதம் வரை கலக்கப்பட்டுள்ளது.

இந்த மதுபானம் கலந்த குளிர்பானம் ஆண்களை மட்டுமின்றி இளம் பெண்களையும் கவர்ந்திழுக்கும் என கோகோ கோலா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. தற்போது ஜப்பானில் மட்டும் விற்பனை செய்யப்படும் இந்த மதுபானம், அதன் வெற்றியை பொறுத்து ஏனைய நாடுகளிலும் விற்பனைக்கு வரவுள்ளது.

Previous Post Next Post