விடுதலைப்புலிகளை ஆதரித்த சுவிஸ் நீதிமன்றம் - Yarl Thinakkural

விடுதலைப்புலிகளை ஆதரித்த சுவிஸ் நீதிமன்றம்

தமிழீழ விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பில்லை என சுவிஸர்லாந்து அரசின் குற்றவியல் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

இதேவேளை விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டோர்கள் அனைவரும் குற்றவியல் அமைப்பு, கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு எனும் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
சுவிஸ் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த யோகேஸ், கவிதாஸ், சிவலோகநாதன், குமார் ஆகிய மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களும் தள்ளுபடி செய்யப்பட்டு வழக்கலிருந்து விடுவிக்கபட்டதுடன் அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன் சுவிஸ் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய பொறுப்புகளில் இருந்த மூவரான குலம், அப்துல்லா, மாம்பழம் ஆகியோர் மீது வங்கி மோசடி தொடர்பில் அறிந்திருந்து உதவியதற்காகத் தண்டனைப் பணம் செலுத்தவும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்படும் தடுப்பும் வழங்கப்பட்டது.
அரச தரப்பு வழக்கறிஞர் திருமதி நோத்தோ இலங்கையிலும், சுவிஸிலும் விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு என்பதற்கு தேடி அளித்த சான்றுகளை அனைத்தையும் சுவிற்சர்லாந்து அரசின் குற்றவியல்  நீதிமன்றம் நிராகரித்தது.
சுவிஸ் நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றம் இலங்கையிலும் அதற்கு அப்பால் எந்த நாட்டிலும் விடுதலைப் புலிகள் அமைப்பு எவ்வேளையிலும் குற்றவியல் அமைப்பாக செயற்பட்டதற்கோ அல்லது குற்றவியல் செயலை ஊக்குவித்தற்கோ எவ்வித சான்றுகளும் இல்லை எனத் தெளிவாக விளக்கத்தையும் அளித்துள்ளது.
Previous Post Next Post