பாடசாலை விடுதியில் மாணவன் சடலம் மீட்பு - Yarl Thinakkural

பாடசாலை விடுதியில் மாணவன் சடலம் மீட்புவேலணை மத்திய கல்லூரி பாடசாலை விடுதியில் தங்கியிருந்து படித்து வந்த மாணவன் ஒருவர் விடுதியில் கழிவறையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று இரவு சடலமாக மீட்கப்பட்டார்.

14 வயதான மயூரன் மதுபாலன் என்ற சிறுவனே சடலமாக மீட்கப்பட்டவராவார். உரும்பிராயைச் சேர்ந்த இந்தச் சிறுவன் சில காலம் கிளிநொச்சியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுவனது தந்தை மற்றும் சிறிய தாயர் ஆகியோர் இச்சிறுவனை வேலணை மத்திய கல்லூரி விடுதியில் தங்கவைத்து கற்பிக்குமாறு கோப்பாய் பிரதேச சிறுவர் நன்னடத்தை பிரிவினரிடம் கோரியுள்ளனர்.

சிறுவர் நன்னடத்தை பிரிவின் சிபாரிசின் அடிப்படையில் அவர் அங்கு தங்க வைக்கப்பட்டு கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் ஒருமுறை விடுதியில் இருந்து தப்பிய சிறுவன் உறவினர்களிடம் சென்றுள்ளார்.

பின்னர் உறவினர்கள் சிறுவனை அழைத்து வந்து மீண்டும் விடுதியில் விட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையிலேயே விடுதி கழிவறையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சிறுவன் சடலமாக சடலமாக மீட்கப்பட்டார். இச்சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்காலம் எனக் கருதப்படுகிறது.


Previous Post Next Post