ரஷ்யா வருமாறு கிம்முக்கு அழைப்பு - Yarl Thinakkural

ரஷ்யா வருமாறு கிம்முக்கு அழைப்பு

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை ரஷ்யாவுக்கு வருமாறு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கி லாவ்ரோவ் அழைப்பு விடுத்துள்ளார். வடகொரியாவுக்கு சென்ற ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர், அங்கு கிம் ஜோங் உன்னை சந்தித்து பேசினார். அப்போதே ரஷ்யா வருமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
பியாங்யோங் நகரில் கிம் ஜோங் உன்னை சந்தித்து பேசிய செர்கி லாவ்ரோவ், நீங்கள் ரஷ்யா வாருங்கள். உங்களை பார்த்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம். கொரிய தீபகற்பத்தில் நீங்கள் முன்னெடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளும் வெற்றி பெற ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Previous Post Next Post