7,000 ரூபா சேர்க்கும் கிழக்கு இளைஞர்கள்: தவராசாவிடம் கொடுப்பதற்காம்! - Yarl Thinakkural

7,000 ரூபா சேர்க்கும் கிழக்கு இளைஞர்கள்: தவராசாவிடம் கொடுப்பதற்காம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக கொடுத்த 7 ஆயிரம் ரூபாவினை திரும்பி தருமாறு கோரிய வடக்கு மாகாண சபை எதிர்க் கட்சித் தலைவர் வி.தவராஜாவின் பணத்தினை வழங்குவதற்கு கிழக்கு மாகாண இளைஞர்கள் முன்வந்துள்ளனர்.

தமிழ் இனப் படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கக ஒவ்வொரு மாகாண சபை உறுப்பினர்களும் தமது மாதாந்த ஊதியத்தில் இருந்து 7 ஆயிரம் ரூபாவினை வழங்கியிருந்தனர்.

நிகழ்வு முடிந்த பின்னர் அப் பணத்தினை மீள தருமாறு தவராஜா எழுத்து மூலம் கோரியிருந்தார். இதன்படி அவர் கோரிய பணத்தினை ஒவ்வொரு பொது மகளிடனும் ஒரு ரூபா விகிதம் சேர்த்து அவரிடம் கையளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முதல் உண்டியல்களில் அதற்கான பணத்தினை திரட்டும் நடவடிக்கைனை ஆரம்பித்துள்ளனர்.

Previous Post Next Post