630அகதிகளை ஏற்கும் ஸ்பெயின் - Yarl Thinakkural

630அகதிகளை ஏற்கும் ஸ்பெயின்


இத்தாலியால் திரும்பி அனுப்பப்பட்டு பின்பு லிபிய கடற்பகுதியில் அக்குவாரிஸ் கப்பலால் மீட்கப்பட்ட 630புலம்பெயர்ந்தோரில் சிலரை ஏற்றுக்கொள்வதற்கு பிரான்ஸ் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக ஸ்பெயின் அறிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் பிரான்ஸ் அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படவிருப்பதாக ஸ்பெயினின் துணை பிரதமரான கார்மென் தெரிவித்துள்ளார். சஹாரா பாலைவனப்பகுதியில் இருக்கும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து படகில் சென்ற 230அகதிகள் மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரின் அருகே நடுக்கடலில் தடுத்து நிறுத்தப்பட்டது.

அவர்களை தங்களது நாட்டுக்குள் அனுமதிக்க இத்தாலியும், மால்டாவும் மறுத்து விட்ட நிலையில் நடுக்கடலில் கடந்த 9நாட்களாக தவிக்க நேரிட்டது. படகுகளில் இருந்தவர்களுக்கு தேவையான உணவு, மருந்து பொருட்கள் செஞ்சிலுவை சங்கம் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த 630அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க ஸ்பெயின் அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சிறிய கப்பல் மற்றும் இரு படகுகளில் அவர்கள் ஸ்பெயின் நாட்டை நோக்கி சென்று கொண்டுள்ளனர். அவர்களில் பலர் உடல்நலக்குறைவால் பாதிகப்பட்டுள்ளனர்.
மேலும் 123சிறுவர்கள் மற்றும் 7கர்ப்பிணி பெண்களும் அந்த கப்பலில் செல்வதால் தொண்டு நிறுவன ஊழியர்கள், வைத்தியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் என சுமார் 2ஆயிரம் பேர் அவர்களுக்கு உதவி செய்ய காத்திருக்கின்றனர்.
Previous Post Next Post