ஒரு நாள் 25மணி நேரமாக அதிகரிக்கும் - ஆராய்சியாளர்கள் தகவல்- - Yarl Thinakkural

ஒரு நாள் 25மணி நேரமாக அதிகரிக்கும் - ஆராய்சியாளர்கள் தகவல்-


பூமியில் ஒரு நாள் என்பது 24மணி நேரத்திலிருந்து 25மணி நேரமாக எதிர்காலத்தில் மாற வாய்ப்பு உள்ளதாக புவியியல் ஆராய்சியாளர் ஸ்டீபன் மேயர்ஸ் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக இருக்கும் ஸ்டீபன் மேயர்ஸ் கூறுகையில், 140கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு அருகில் நிலவு இருந்தது. தற்போது அது 44ஆயிரம் கி.மீற்றர் தூரம் விலகி சென்றுள்ளது. 140கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஒரு நாள் என்பது 18மணி நேரம் 41 நிமிடமாக இருந்தது. தற்போது 24மணி நேரமாக உள்ளது.

நிலவு வருடத்திற்கு 3.82சென்டி மீற்றர் விலகி சென்றுள்ளது. சென்று கொண்டிருக்கிறது. இவ்வாறு செல்வதால் சில மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர், நிலவு அதிகம் தூரம் சென்று விடும். இதனால் பூமியின் சுற்றும் வேகத்தி மாறுபாடு ஏற்பட்டு பூமியில் ஒரு நாள் என்பது 25மணி நேரமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கணக்கின் அடிப்படையில் இன்னும் 200மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர் இது ஒரு மணி நேரமாக மாறும் என கூறப்படுகிறது.

Previous Post Next Post