ட்ரம்புடன் விளையாட நினைத்தால் விபரீதம் பெரிதாக இருக்கும் -அமெரிக்கா எச்சரிக்கை- - Yarl Thinakkural

ட்ரம்புடன் விளையாட நினைத்தால் விபரீதம் பெரிதாக இருக்கும் -அமெரிக்கா எச்சரிக்கை-

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புடன் விளையாட வேண்டாம் என வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னுக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் எச்சரித்துள்ளார்.
அடுத்த மாதம் ட்ரம்பை சந்திக்கும் போது, அவரை வைத்து விளையாடலாம் என்று கிம் நினைத்தால் அது மிகப் பெரிய தவறு என பாக்ஸ் நியூஸ் நிறுவனத்துக்கு பேட்டியளித்த மைக் கூறியுள்ளார். அவர் பேட்டியில் மேலும் கூறுகையில்: அப்படி ஏதேனும் நடந்தால் ஜூன் 12ஆம் திகதி நடைபெறவிருக்கும் அமெரிக்கா-வடகொரியா உச்சிமாநாட்டு பேச்சுவார்த்தையில் இருந்து ட்ரம்ப் வெளிநடப்பு செய்வார். ட்ரம்ப் பொது உறவுகள் பற்றி சிந்திக்கவில்லை. அவர் சமாதானத்தை பற்றியே நினைக்கிறார். தென் கொரிய ஜனாதிபதி மூனை, ட்ரம்ப் சந்திக்கவுள்ளார் என தெரிவித்தார்.

Previous Post Next Post