வீதியில் ஆறாக ஓடிய சொக்லெட் - Yarl Thinakkural

வீதியில் ஆறாக ஓடிய சொக்லெட்


போலந்து நாட்டில் இருக்கும் வார்ஸாவ் என்ற பகுதியில் லொறி விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த சொக்லெட் வீதியில் ஆறாக ஓடியது. லொறியில் ஏற்பட்ட பிரச்சினையால் நேற்று இரவு வீதியிலிருந்த தடுப்புக்களுடன் மோதி, வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

குறித்த லொறியில் சொக்லெட் கலவை இருந்துள்ளது. மொத்தமாக திரவ நிலையில் தாங்கியில் 12தொன் சொக்லெட் நிரப்பப்பட்டிருந்தது. இந்த லொறி கவிழ்ந்தவுடன் மொத்த சொக்லெட் கலவையும் தரையில் சிதறி வீதியில் ஆறாக ஓடியுள்ளது. இதனால் இந்த வீதி உடனடியாக மூடப்பட்டது. வீதியின் இரு பக்கமும் சொக்லெட் கலவை ஓடியுள்ளது.

அத்துடன் 12தொன் சொக்லெட் குவியல் வீதியில் தேங்கி உறைந்தது. இதனால் வீதி சீரமைப்பு பணி 8மணி இடம்பெற்றது. லொறியும் வீதியிலேயே சொக்லெட்டுடன் ஒட்டி இறுகியது. இதனால் அந்த சொக்லெட் நிறுவனத்திற்கு இலட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Previous Post Next Post