எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணம் கொள்ளை - Yarl Thinakkural

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணம் கொள்ளை


மாங்குளம் - மல்லாவி வீதி, ஒட்டறத்தகுளம் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று அதிகாலை கத்திமுனையில் பணியாளரை மிரட்டி ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
வாகனம் ஒன்றில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் வந்த கொள்ளையர்கள், துங்கிக்கொண்டிருந்த பணியாளரை டீசல்; நிரப்பு வேண்டுமென கூறி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் டிசல் நிரப்ப வந்த பணியாளரை கத்தியைக் காட்டி மிரட்டிய அவர்கள், அவரிடம் இருந்த சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மல்லாவி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.  சம்பவ இடத்துக்கு வந்து பர்வையிட்ட பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post Next Post