வலம்புரி சங்குடன் இளைஞர்கள் கைது - Yarl Thinakkural

வலம்புரி சங்குடன் இளைஞர்கள் கைது


வலம்புரி சங்கை விற்பனைக்காக தம்புள்ளைக்கு எடுத்துச் சென்ற இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் இருந்து தம்புள்ளைக்கு சென்ற இருவரே வவுனியா நொச்சிமோட்டை பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா பொலிஸ் நிலையத்தின் மோசடி தடுப்பு பிரிவின் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கார் ஒன்றை சோதனையிட்ட போது அதில் வலம்புரி சங்குடன் சென்ற இரண்டு பேரை கைது செய்தனர்.
கிளிநொச்சியை சேர்ந்த இந்த சந்தேக நபர் தம்புள்ளையில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு ஒன்றரை கோடி ரூபாவுக்கு விற்பனை செய்வதற்காக இந்த வலம்புரி சங்கை கொண்டு சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கிளிநொச்சியை சேர்ந்த 24 மற்றும் 21 வயதான இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post