யாழில் இயங்கும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை -மேஜர் ஆனோல்ட்- - Yarl Thinakkural

யாழில் இயங்கும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை -மேஜர் ஆனோல்ட்-

யாழ்.மாநகர சபைக்குச் சொந்தமான கட்டடத்தில் 3 வருடங்களுக்கு மேலாக அரசியல் கட்சி ஒன்றினால் நடத்தப்படும் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று வாடகை கொடுக்காமல் இயங்கிவருவதாக மேஜர் இமானுவேல் ஆனோல்ட் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த தொலைக்காட்சி நிறுவனத்திற்க எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேஜர் எச்சரிக்கை செய்துள்ளார்.

யாழ்.மாநக சபையின் அமர்வு இன்று நடைபெற்றது. அதில் ஈ.பி.டி.பி கட்சி கடந்த ஆட்சியின் போது செய்த ஊழல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் லோகதயாளன் பிரேரணை ஒன்றினை முன்வைத்திருந்தார்.

குறித்த பிரேரணையினை ஏற்றுக் கொண்டு, அக் கட்சியின் மோசடி தொடர்பில் மேலும் கருத்து வெளியிடும் போதே மேஜர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post