‘காலா’ இசை வெளியீட்டில் இரசிகர்களை ஏமாற்றிய ரஜினி - Yarl Thinakkural

‘காலா’ இசை வெளியீட்டில் இரசிகர்களை ஏமாற்றிய ரஜினி

அரசியல் குறித்து பேசுவதற்கு நேரம் வரவில்லை. அந்நேரம் வரும் போது ஆண்டவன் ஆசிர்வாதத்தால் மக்கள் ஆதரவால் தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் நல்ல நேரம் பிறக்கும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
காலா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனத்தில் உள்ள வை.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் உரையாற்றிய ரஜினி மேலும் தெரிவிக்கையில்:
இது இசை வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை. படத்தின் வெற்றி விழா மாதிரி இருக்கிறது.
தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்பதே எனது வாழ்க்கையில் ஒரே கனவு. அவற்றை இணைத்து விட்டால் அடுத்த நாளே நான் கண்ணை மூடினாலும் பரவாயில்லை.
நான் ஹிந்தி படத்துக்காக பல ஆண்டுகள் மும்பையில் இருந்திருக்கிறேன். அங்குள்ள தாராவியில் 70சதவீதம் தமிழ் மக்கள் உள்ளனர். அங்குள்ள மக்களைப் பற்றி படம் எடுக்கலாம் என்றேன். அது தான் ‘காலா’ படமாக உருவாகியிருக்கிறது. ‘காலா’ அரசியல் படம் இல்லை. ஆனால் படத்தில் அரசியல் இருக்கிறது. இன்னும் நான் விடயத்துக்கு (அரசியல்) வரவில்லை என நினைக்கிறீர்கள். இன்னும் அந்த திகதி வரவில்லை. கடமை இருக்கிறது. நேரம் வரும். அந்த நேரம் வரும்போது ஆண்டவன் ஆசிர்வாதத்தால், மக்கள் ஆதரவால் தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் நல்ல நேரம் பிறக்கும்
Previous Post Next Post