ட்ரம்பின் மனைவி மருத்துவமனையில் - Yarl Thinakkural

ட்ரம்பின் மனைவி மருத்துவமனையில்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் மனைவி மெலனியா சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ட்ரம்ப்பின் மூன்றாவது மனைவி மெலினியா. இவர் சுலேனேவியா நாட்டை சேர்ந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 12வயதில் பரோன் என்ற மகன் உள்ளார். ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மெலனியா முக்கிய பங்கு வகித்தார். வெற்றி பெற்ற பின்னர் அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்துடன் பல்வேறு அரசு நிகழ்வுகளில் அவர் பங்கு கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் கடந்த வாரம் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து நடைபெற்ற பரிசோதனையில் அவருக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பது தெரியவந்தது. இதனால் தற்போது சிறுநீரக அறுவைச்சிகிச்சை மேற்கொள்வதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், மேரிலேண்டில் உள்ள வால்டர் ரீட் இராணுவ மருத்துவமனையில் மெலனியா அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவைசிகிச்சை செய்வது தொடர்பான நடைமுறைகள் நடந்து வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது. விரைவில் அவர் நலம்பெற்று அரசுப்பணிகளை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post