தூத்துகுடி கொலையை கண்டித்தது; யாழில் போராட்டம்! - Yarl Thinakkural

தூத்துகுடி கொலையை கண்டித்தது; யாழில் போராட்டம்!

தமிழ்நாடு தூத்துகுடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையினை மூடுமாறு கோரி பொதுமக்கள் மேற்கொண்ட போராட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட மக்களுக்கு நீதிகோரி யாழ்ப்பாணத்தில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.

யாழ்.நல்லூர் ஆலயத்தின் முன்பு இடம்பெற்ற இக் கண்டன போராட்டத்தை வடக்கு கிழக்கு ஒருங்கினைப்பு குழு ஏற்பாடு செய்திருந்தது.

கண்டன வார்த்தைகள் அடங்கிய பதாதைகள் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள்  தமது போராட்டம் தொடர்பான கோரக்கைள் அடங்கிய மகஜர் ஒன்றினையும் யாழ்.இந்திய தூதரக அதிகாரிகயிடம் கையளித்தனர்.
Previous Post Next Post