அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு - Yarl Thinakkural

அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு


பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மீது அசான் இக்பால் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அசான் இக்பால் (வயது-59). ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியை சேர்ந்த இவர் இன்று பஞ்சாப் மாகாணம் நாரோவால் மாவட்டத்துக்குட்பட்ட கஞ்ச்ரூர் பகுதியில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, ஒரு இளைஞர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். குறி தவறி பாய்ந்த துப்பாக்கி தோட்டா அசான் இக்பாலின் வலது கை தோள்பட்டையில் பாயந்தது. இதில் படுகாயமடைந்த இக்பால், நாரோவால் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக 20வயதிற்குட்பட்ட இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Previous Post Next Post