கோலாகலமாக நிறைவடைந்த இளவரசர் திருமணம் - Yarl Thinakkural

கோலாகலமாக நிறைவடைந்த இளவரசர் திருமணம்


இங்கிலாந்த் இளவரசர் ஹரி-மேகன் மார்கலே திருமணம் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் திருமணம் நேற்று நடைபெற்றது.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகன் ஹரி (வயது-33). மேகன் மார்கலுக்கும் (வயது-36) ஆகிய இருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.
அரச குடும்ப திருமணத்தையொட்டி லண்டனில் உள்ள ஏஞ்சலிகன் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. திருமணத்தில் இணையும் இளவரசர் ஹரி-மேகன் தம்பதியை கடவுள் ஆசீர்வதிப்பாராக. அவர்கள் இருவரும் கடவுளின் அன்பால் நீடூடி வாழ வேண்டும் என பிரார்த்தனை நடந்தது.
திருமணத்தில் மணமகள் மேகன் மார்கலின் தந்தை தோமஸ் பங்கேற்கவில்லை. சமீபத்தில் தான் அவருக்கு இருதய சத்திரசிகிச்சை நடந்தது. அதனால் ஹரியின் தந்தையும், இளவரசருமான சார்லஸ் மணமகள் மேகனுக்கும் தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
இளவரசர் ஹரியின் பாட்டி ராணி எலிசபெத், அண்ணன் வில்லியம் அவரது மனைவி கேத்மிடில்டன், அத்தம்பதியின் குழந்தைகள் உள்ளிட்ட அரச குடும்பத்தினர் பங்கேற்றனர். இவர்கள் தவிர திருமணத்தில் பங்கேற்க 600விருந்தினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. மேலும் 2,640 பொதுமக்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் அங்குள்ள ஒரு திடலில் நின்று திருமணத்தை பார்க்க வசதி செய்யப்பட்டது.
எங்கிருந்து திருமண விழாவை வசதியாக பார்க்க முடியுமோ, அந்த பகுதியில் உள்ள வீதிகளில் நேற்று முதல் இலட்சக்கணக்கான மக்கள் நடைபாதைகளில் இடம்பிடித்து காத்திருந்தனர்.
நேற்றுமுன்தினம் மாலை 5.10மணியளவில் மணமக்கள் மோதிரம் மாற்றிக்கொண்டனர். ஒருவரையொருவர் முத்தமிட்டு அன்பை பரிமாறி கொண்டனர். திருமணம் முடிந்ததும் விண்ட்சோர் நகர் வீதியில் மணமக்கள் ஊர்வலமாக செல்ல அலங்கார குதிரைகள் பூட்டிய வண்டி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
பிரிட்டன் அரச குடும்பத்தின் இந்த திருமணத்தை உலகில் உள்ள 80கோடி மக்கள் தொலைக்காட்சி மூலம் கண்டு ரசித்தனர்.
திருமணம் நடைபெற்ற இடம் மற்றும் நகரின் மற்ற பகுதிகளில் ஏராளமான பொலிஸாரும், உளவுத்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Previous Post Next Post