துக்கத்தை வெளிப்படுத்தாத மாகாண சபை: முழு கம்பத்தில் கொடி பறக்கவிட்டது! - Yarl Thinakkural

துக்கத்தை வெளிப்படுத்தாத மாகாண சபை: முழு கம்பத்தில் கொடி பறக்கவிட்டது!

மே 18 தமிழ் இனப்படுகொலை துக்க தினமாக பிரகடனம் செய்து தீர்மானம் நிறைவேற்றிய வடக்கு மாகாண சபையே தனது பேரவைச் செயலகத்தின் முன் முழு கம்பத்தில் மாகாண, தேசிய கொடிகள் பறக்கவிட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் போது கொடிகளை அரை கம்பத்தில் பறக்கவிட்டு துக்கத்தை வெளிப்படுத்துமாறு வடமாகாண கல்வி அமைச்சர் கோரிக்கை விட்டிருந்த நிலையில், பாடசாலைகளின் கொடிகள் அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

இருப்பினும் துக்க தினத்தை பிரகடணம் செய்த வடக்கு மாகாண சபையே துக்கத்தை மக்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் கொடியை முழு கம்பத்தில் பறக்கவிட்டுள்ளமை அதிருப்தியை ஏற்ப்படுத்தியுள்ளது.
Previous Post Next Post