தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குமாறு கர்நாடகவுக்கு உத்தரவு - Yarl Thinakkural

தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குமாறு கர்நாடகவுக்கு உத்தரவுதமிழகத்துக்கு மே மாதத்துக்குள் 4 ரி.எம்.சி. நீர் வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், ஆணையை மீறினால் கடும் விளைவை சந்திக்க நேரிடுமென எச்சரித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி நீர்ப் பங்கீட்டிற்கான வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று தெரிவித்தார்.
இதையடுத்து கோபமடைந்த நீதிபதிகள், காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க முடியாது. தமிழகத்துக்கு இந்த மாதம் 4 ரி.எம்.சி. நீர் கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும். இந்த உத்தரவை மீறினால் கர்நாடக அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
Previous Post Next Post