நுண்கடன் நிறுவனத்தின் தொல்லையால் தீயில் எரிந்த பெண் - Yarl Thinakkural

நுண்கடன் நிறுவனத்தின் தொல்லையால் தீயில் எரிந்த பெண்


நுண் கடன் நிறுவனம் ஒன்றில் பெற்ற கடனை அறவிடச் சென்ற நிறுவன ஊழியர்கள் கொடுத்த தொல்லை தாங்காது இளம் குடும்ப பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்ந்துக்கொண்டார்.
கோண்டாவில் வடக்கு பகுதியில் இந்தச் சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு சிறு பிள்ளைகளின் தாயான சுதாகரன் தர்சிகா (வயது-25)  என்பவரே உயிரை மாய்த்துக்கொண்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். 
கடந்த மூன்றாம் திகதி இந்த பெண்ணின் வீட்டுக்கு வந்த தனியார் நிதி நிறுவன் ஊழியர்கள் செலுத்த வேண்டிய பணத்தினை கேட்டு இவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதாக தெரியவருகிறது. மதியம் வீட்டுக்கு வந்த கணவனிடம் நடந்த விடயத்தை இப்பெண் கூறியுள்ளார்.
அப்போது பணம் இல்லாததால் வேறு யாரிடமாவது கடன் பெற்று நிதி நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய பணததைக் கொடுக்குமாறு கணவன் கூறியுள்ளார். இந்நிலையில் மாலை 3:00 வீட்டுக்கு பின்னால் சென்ற இப்பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ மூட்டியதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயில் மனைவி எரிந்து கொண்டிருந்ததை கண்ட கணவன் தீயை அணைத்து இப்பெண்ணை காப்பாற்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நான்கு நாட்களாக அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இளம் குடும்ப பெண் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post Next Post