வைபர் பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு - Yarl Thinakkural

வைபர் பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு


இலங்கை பயனாளர்களின் தகவல்கள் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வைபர் தொடர்பாடல் செயலி நிறுவனம் உறுதிமொழி வழங்கியுள்ளது.
இதன்படி தகவல்களின் இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இணையத்தில் பல்வேறு தகவல் கசிவு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் 8மில்லியனுக்கு அதிகமான மக்கள் வைபர் செயலியை பயன்படுத்தி வருகின்ற நிலையில், வைபர் ஸ்டிக்கர்களை 100மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அனுப்புவதும் பெறுவதுமாக இருக்கிறார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post Next Post