பாகிஸ்தானில் சீக்கிய தலைவர் சுட்டுக்கொலை - Yarl Thinakkural

பாகிஸ்தானில் சீக்கிய தலைவர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் சீக்கிய தலைவரை மர்ம நபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்த சம்பவத்தால் அங்கு வாழும் சீக்கியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் பெஷா வரை சேர்ந்தவர் கார்ன் ஜித்சிங் (வயது-52). இவர் அங்கு கடை நடாத்தி வந்தார்.

சீக்கியர் அமைப்பின் தலைவராகவும் இருந்தார். இவர் தனது கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது அங்கு சென்ற  மர்ம நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டான். குண்டு பாய்ந்த அவர் அவ்விடத்திலே பலியானார். அவரை துப்பாக்கியால் சுட்ட நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இக்கொலைக்கான காரணம் தெரியவில்லை. பாகிஸ்தானில் சீக்கியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். சமீப காலமாக இவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதால் அங்கு வாழும் சீக்கியர்கள்
அச்சமடைந்துள்ளனர்.
Previous Post Next Post