பதவியேற்புக்கு எதிராக களமிறங்கிய மூத்த வழக்கறிஞர் - Yarl Thinakkural

பதவியேற்புக்கு எதிராக களமிறங்கிய மூத்த வழக்கறிஞர்

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைத்த ஆளுநர் முடிவுக்கு எதிராக மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஒட்டுமொத்த அரசியலமைப்பு அதிகாரத்தையே கர்நாடக ஆளுநர் தவறாக பயன்படுத்துவதாக ராம்ஜெத் மலானி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆளுநர் வாஜுபாய்  முதல்வராகப் பதவியேற்க எடியூரப்பாவுக்கு நேற்று இரவு அழைப்பு விடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று இரவு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு, அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.
 விசாரணையின் முடிவில் எடியூரப்பாவின் பதவி ஏற்பு விழாவை நிறுத்தி வைக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றார். இந்நிலையில் கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி இன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் ராம்ஜெத் மலானி  கூறியிருப்பதாவது: கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா, பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க அழைத்திருப்பதன் மூலம் அரசியலமைப்புச்சட்டம் அவருக்கு வழங்கியுள்ள ஒட்டுமொத்த அதிகாரத்தையும், தவறாகப் பயன்படுத்தி இருக்கிறார். அவரின் பதவிக்கும், அவர் சார்ந்திருக்கும் அலுவலகத்துக்கும் அவமரியாதையைத் தேடிக் கொடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார்.


Previous Post Next Post