அரசியலில் குதிக்கவுள்ள வீரப்பனின் மனைவி - Yarl Thinakkural

அரசியலில் குதிக்கவுள்ள வீரப்பனின் மனைவி


பொதுமக்கள் ஆதரவளித்தால் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார். மண் காக்கும் வீர தமிழர் பேரமைப்பு என்ற பெயரில் அரசியல் சார்பற்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ள சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி தமிழகம் முழுவதும் அவரது இயக்கத்திற்கு உறுப்பினர் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று மாலை வாழப்பாடி பகுதியில் உறுப்பினர் சேர்க்கைக்காக சென்றிருந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:
 மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிறகு தற்போதைய ஆட்சி நிர்வாகம் சரியாக இயங்கவில்லை. தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு 25ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக சிறையில் அடைபட்டு கிடக்கும் 3பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். எனது ஆயுள் முடிவதற்குள் எனது கணவர் வீரப்பனுக்கு அவரது நினைவிடத்தில் மணிமண்டபம் அமைத்தே தீருவேன் என தெரிவித்தார்.
Previous Post Next Post