பணத்துக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி - Yarl Thinakkural

பணத்துக்காக கொல்லப்பட்டாரா ஸ்ரீதேவி


நடிகை ஸ்ரீதேவிக்கு ஓமனில் 240கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பொலிசி இருந்த நிலையில், ஐக்கிய அரபு நாடுகளில் மரணடைந்தால் மட்டுமே இந்த பொலிசி தொகை கிடைக்கும். எனவே அவர் துபாயில் மரணடைந்ததில் சந்தேகம் இருப்பதாக உச்ச நீதிமன்த்தில் இன்று வழக்கு விசாரணையின் போது மனுதாதரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
துபாய்க்கு திருமண நிகழ்ச்சிக்காக பெப்ரவரி மாதம் சென்ற நடிகை ஸ்ரீதேவி (வயது 54) அங்கு மரணமடைந்தார். மாரடைப்பால் மரணமடைந்தார் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில், ஸ்ரீதேவி மது அருந்தியதால், ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் விழுந்து மரணமடைந்தார் என கூறப்பட்டது.
அவரின் மரணத்தில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை எனக் கூறி அவரின் உடலையும் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு மும்பையில் இறுதி சடங்குகள் நடந்தன.
ஆனால் நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி இயக்குனர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதாடினார். நடிகை ஸ்ரீதேவி பெயரில் 240கோடி ரூபாய்க்கு ஓமன் இன்சூரன்ஸ் பொலிசி உள்ளது. ஐக்கிய அரபு நாடுகளில் மரணமடைந்தால் மட்டுமே இந்த பொலிசி தொகை கிடைக்கும். இந்நிலையில் துபாயில் அவர் மரணமடைந்துள்ளார். எனவே அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று வாதாடினார்.

Previous Post Next Post