தாயிடம் ஆசீர்வாதம் பெற்ற ஸ்டாலின் - Yarl Thinakkural

தாயிடம் ஆசீர்வாதம் பெற்ற ஸ்டாலின்

சர்வதேச அன்னையர் தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் தாய் தயாளு அம்மாளை நேரில் சந்தித்து ஆசிபெற்றார்.
இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில், கருவிலேயே உணர்வூட்டி, உயிரூட்டி, பின் பாலூட்டி, தாலாட்டி, சீராட்டி, பாராட்டி, உறவையும் உலகையும் உவப்புடன் காட்டிய, உயர்ந்த கோயிலாம் அன்புத்தாயிடம் கோபாலபுரம் இல்லத்தில், அன்னையர் தினத்தில் பாசம் மிகுந்த வாழ்த்துகளைப் பெற்றுப் பெரிதும் மகிழ்ந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post Next Post