ராகுலுக்கு திருமணம்? - Yarl Thinakkural

ராகுலுக்கு திருமணம்?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் திருமணம் நடைபெறப் போவதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவலை அடுத்து உத்தரபிரதேச காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வான அதிதி சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ரேபரேலி சதார் தொகுதியில் ஐந்து முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் அகிலேஷ் சிங். இவரது மகள் அதிதி (வயது-29). அமெரிக்க பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டம் பெற்ற இவர் 2017இல் அரசியலில் நுழைந்தார். பின்னர் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அதிதி சிங்குடன் இருக்கும் படமும், சோனியாகாந்தி அதிதியின் பெற்றோருடன் இருக்கும் படங்களும் சனிக்கிழை சமூக ஊடகங்களில் பரவின. அப்படங்களில் ராகுல்காந்தி திருமணத்துக்கு ஒரு துணையைத் தேர்ந்தெடுத்து விட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், சோனியா காந்தி இருவரின் திருமணத்துக்கும் ஒப்புதலளித்துள்ளதாக தகவல் பரவியது.
இது குறித்து அதிதி சிங்கி தெரிவிக்கையில்: எனக்கும் ராகுல்காந்திக்கும் திருமணம் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது யாரோ சிலர் பரப்பி விட்ட வதந்தி. ராகுல்காந்தி அண்ணன் போன்றவர். ராகுலும் சோனியாவும் ரேபரேலியில் எங்கள் வீட்டுக்கு வந்த போது எடுக்கப்பட்ட படங்களை, வதந்தியாக பரப்புவதற்காகச் சிலர் பயன்படுத்தியுள்ளனர். இதற்கும் பின்னால் உள்ளவர்கள் முற்றிலும் தவறானவர்கள் என அதிதி சிங் குற்றஞ்சாட்டினார்.
கர்நாடக பேரவை தேர்தல் முடிந்தவுடன் விரைவில் ராகுல் காந்தியுடன் எனக்கு திருமணம் பேசப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வரும் வதந்திகளால் மிகவும் வருத்தப்படுகிறேன் என அதிதி தெரிவித்தார்.

Previous Post Next Post