ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகமில்லை -மனு தள்ளுபடி- - Yarl Thinakkural

ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகமில்லை -மனு தள்ளுபடி-

ஸ்ரீதேவி மரணம் குறித்து விசாரணை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஸ்ரீதேவி கடந்த பெப்ரவரி மாதம் துபாய் சென்றிருந்த போது தங்கியிருந்த ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தகவல் பரவியதையடுத்து துபாய் பொலிஸார் விசாரணை நடத்தி அதன் பின்னர் உடலை ஒப்படைத்தனர்.
எனினும் நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இயக்குனர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. துபாய் பொலிஸார் நடத்திய விசாரணையில் சந்தேகப்படும் அம்சம் எதுவும் இல்லை என்று கூறியதை சுட்டிக்காட்டி மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Previous Post Next Post