பாடல்களை திருடுவதாக இளையராஜா பொலிஸில் புகார் - Yarl Thinakkural

பாடல்களை திருடுவதாக இளையராஜா பொலிஸில் புகார்

இசையமைப்பாளர் இளையராஜாவின் அனுமதியின்றி அவரது பாடல்கள் அடங்கிய சி.டி.க்களை கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ளதாக பொலிஸ் ஆணையாளரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர பொலிஸ் ஆணையாளரிடம் வழக்கறிஞர் நேற்று அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: எனது கட்சிக்காரர் இளையராஜா பிரபல இசையமைப்பாளராக உள்ளார். அவரது அனுமதியின்றி அவரது பாடல்களை கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் சி.டி.க்களாக வெளியிட்டு வருகிறது. இளையராஜா பெயரைப் பயன்படுத்தி தொழில்முனைவோர், மாணவர்கள் மற்றும் வணிகர்களிடம் பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபடுகிறார். ஆகவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

Previous Post Next Post