ஆவா குழுவின் வாள்வெட்டில் இளைஞர்கள் படுகாயம் - Yarl Thinakkural

ஆவா குழுவின் வாள்வெட்டில் இளைஞர்கள் படுகாயம்


நீர்வேலியில் நேற்று மாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்தனர். இவர்களில் ஒருவரின் நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக தெரியவருகிறது.
நீர்வேலி - செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் பகுதியில் வைத்து இடம்பெற்ற வாள்வெட்டில் அதே இடத்தைச் சேர்ந்த அப்புத்துரை திருநேசன் (வயது-23) என்ற இளைஞனுக்கு கழுத்தில் பலமாக வெட்டு விழுந்துள்ளது. அவர் யாழ்.போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, சத்திரசிகிச்சை முன்னெடுக்கப்படுகிறது என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
சம்பவ இடத்தைச் சேர்ந்த தவராஜா அனுராஜ் வயது(21)என்ற இளைஞர் காலில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தேடப்பட்டுவரும் ஆவா குழுவின் முக்கியஸ்தர் வினோத் உள்ளிட்ட 8பேர் கொண்ட கும்பலே இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டது என பொலிஸார் கூறினர். 4 மோட்டார் சைக்களில் சென்று இருவர் மீதும் சாரமாரியாக வாளால் வெட்டியுள்ளனர்.
அண்மையில், வாள் வெட்டுக்கு இலக்கான நபர் ஆவாக் குழுவைச் சேர்ந்த ஒருவரை தகாத வார்த்தையால் பேசியதாகவும், அந்த கோபத்தின் நிமித்தம், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Previous Post Next Post