யாழில் கேபிள் ரீ.வி இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை - Yarl Thinakkural

யாழில் கேபிள் ரீ.வி இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை


யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக வழங்கப்படும் கேபிள் ரீவி இணைப்புகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளாமல் சட்டவிரோதமாக கேபிள் ரீவி இணைப்புகள் வழங்கப்படுகின்றன. அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கொழும்பிலிருந்து வந்துள்ளனர்.

ஆணைக்குழுவின் இந்த நடவடிக்கைக்கு யாழ்ப்பாணம் பொலிஸாரின் சேவையையும் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாரின் உதவியைப் பெற்று இந்த சட்டவிரோத நடவடிக்கையைக் கட்டுப்படுத்த நீதிமன்று அனுமதி வழங்கவேண்டும் என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை விண்ணப்பம் செய்யப்பட்டது.

அதனை ஆராய்ந்த நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், சட்டவிரோத கேபிள் ரீவி இணைப்புக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கினார்.
அடுத்து யாழ்ப்பாணம் மாநகரம் மற்றும் நல்லூர் பிரதேசம் உள்பட்ட பகுதிகளில் சட்டவிரோத கேபிள் இணைப்புக்கள் துண்டிக்கப்படும் என தொலைத்தொடர்பு  ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்ததுள்ளனர்.
Previous Post Next Post