தந்தையின் வான் மோதி ஐந்து வயது மகள் பலி -வவுனியாவில் நெஞ்சுருக்கும் துயரம்- - Yarl Thinakkural

தந்தையின் வான் மோதி ஐந்து வயது மகள் பலி -வவுனியாவில் நெஞ்சுருக்கும் துயரம்-
தந்தையின் வாகனத்தில் சிக்குண்டு அவரது ஐந்து மகள் மரணமான நெஞ்சுருக்கும் பரிதாப சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றது. மகளை முன்பள்ளிக்கு ஏற்றிச் சென்று இறக்கிவிட்டுத் திரும்பும்போது தந்தையின் வாகனத்தில் எதிர்பாராத விதமான சிறுதி சிக்கிக்கொண்டதால் இந்தத் துயரம் இடம்பெற்றது.
வவுனியா - செட்டிகுளம் பகுதியில் இடம்பெற்ற இந்த பரிதாப சம்பவத்தில் சுகந்தன் துசாந்தினி என்ற சிறுமியே மரணமடைந்தவராவார்.

தினமும் வேலைக்குச் செல்லும்போது வானில் மகளை ஏற்றிச் சென்று முன்பள்ளியில் தந்தை இறக்கிவிட்டுச் செல்வது வழமை.

அவ்வாறே நேற்று முன்தினம் புதன்கிழமை காலை வீட்டிருந்து வானில் மகளை ஏற்றிக்கொண்டு சென்ற தந்தை முன்பள்ளியில் மகளை இறக்கிவிட்டார். அதன்பின் வாகனத்தைத் திரும்பும்போது  வழமைக்கு மாறாக வாகனத்தில் முன்புறம் ஊடாக சிறுமிமுன்பள்ளிக்கு  நுழைய முயன்றபோது வானுடன் மோதியுள்ளார்.

இதனால் காயமடைந்த மகளை வானில் ஏற்றிக்கொண்டு செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தந்தை அனுமதித்தார். செட்டிகுளத்தில் இருந்து சிறுமி அவசரமாக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

வவுனியா வைத்தியசாலையில் அதீ தீவிர சிகிசை பிரிவில் சிறுமி அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிசை அளிக்கப்பட்டது. அறுவை சிகிசையும் அங்கு மேற்கொள்ளப்பட்டது. வைத்தியர்களை கடுமையாகப் போராடியபோதும் சிறுமியின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.நேற்று வியாழக்கிழமை மத்தியம் சிறுமியின் உயிர் பிரிந்தது.இறந்த சிறுமி பெற்றோருக்கு ஒரேயொரு மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் அந்தப் செட்டிகுளம் பிரதேசத்தையே பெரும் சோகத்தில்  ஆழ்த்தியுள்ளது.

Previous Post Next Post