கைதிகளை நேரில் சென்று வரவேற்ற ட்ரம்ப் - Yarl Thinakkural

கைதிகளை நேரில் சென்று வரவேற்ற ட்ரம்ப்


வடகொரிய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அமெரிக்கர்கள் மூவரும் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் வெளியுறவுச் செயலாளர் மைக் பாம்பியோ ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
வடகொரியாவிலிருந்து திரும்பிய இவர்களை விமான படைத்தளத்துக்கு சென்று ட்ரம்ப் நேரில் வரவேற்றார்.
ட்ரம்ப்- கிம் ஜோங் உன் இடையிலான நேரடி பேச்சுவார்த்தைக்கு இடம்பெறவுள்ள நிலையில் நல்லெண்ண அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. அமெரிக்கர்களை விடுதலை செய்த கிம்முக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ட்ரம்ப் கூறினார்.
விடுவிக்கப்பட்ட மூன்று கைதிகளில் ஒருவர் 2015ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர். ஏனைய இருவரும் ஓராண்டுக்கும் மேல் சிறையில் இருப்பவர்கள். அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது அரசியல் என்றும், மனித உரிமை மீறல் என்றும் பரவலாக கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் மூவரையும் வடகொரியா விடுவித்துள்ளது. இவர்கள் இன்று அமெரிக்கா திரும்பினர்.


Previous Post Next Post