ஹொங்கோங்கில் தானியங்கி மதுக்கடை - Yarl Thinakkural

ஹொங்கோங்கில் தானியங்கி மதுக்கடை


ஹொங்கோங்கில் ஊழியர்கள் யாரும் இன்றி தானாக இயங்கும் மதுபான கடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதை சீனாவின் மிகப்பெரிய இ-வர்த்தக நிறுவனமான அலிபாபா உருவாக்கியுள்ளது.
முற்றிலும் தானியங்கி மையமாக்கப்பட்டுள்ள இம்மதுக்கடை ஹொங்கோங்கின் வினெஸ்போ பகுதியில் உள்ளது. அனைத்து மதுபான போத்தல்களிலும் அடையாள குறி பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் மதுபோத்தல் எடுத்தவரின் உருவம் கணனி திரையில் தெரியும். பின்னர் அவர் மதுபோத்தலுக்குரிய பணத்தை செலுத்த வரும் போது முக அங்கீகாரம் மூலம் அந்நபர் உறுதி செய்யப்படுகிறார். அதையடுத்து ஒன்லைன் மற்றும் மொபைல் மூலம் பணம் பெறப்படுகிறது.

Previous Post Next Post