வட-தென்கொரியா ஜனாதிபதிகள் திடீர் சந்திப்பு - Yarl Thinakkural

வட-தென்கொரியா ஜனாதிபதிகள் திடீர் சந்திப்பு


கொரிய தீபகற்பத்தில் இருந்து அணு ஆயுதங்களை ஒழிக்க வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் விரும்புகின்றார். ஆனால் தமது அரசின் உறுதித் தன்மைக்கு வாஷிங்டன் உத்தரவாதமளிக்குமா என்பதை அவரால் உறுதிப்படுத்த முடியவில்லையென தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் தெரிவித்துள்ளார்.
வடகொரிய மற்றும் தென்கொரிய ஜனாதிபதிகள் இருவரும் இராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் நேற்றுமுன்தினம் திடீரென சந்தித்தனர். இவர்கள் இரண்டாவது முறையாக சந்தித்துள்ளனர்.
வடகொரியா - அமெரிக்க உச்சிமாநாடு ஜூன் 12ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில் அதை இரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்தார். பின்னர் உச்சிமாநாட்டுக்கு அவர் விருப்பம் தெரிவித்திருந்தார். 
இந்நிலையில் வட-தென்கொரிய ஜனாதிபதிகள் இருவரும் இராணுவம் விலக்கப்பட்ட கூட்டு பாதுகாப்பு பகுதியில் நேற்றுமுன்தினம் பிற்பகல் சந்தித்து பேசியதாக தென்கொரிய ஜனாதிபதி மூனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் கருத்து வெளியிட்டுள்ள தென்கொரிய ஜனாதிபதி, முன்பே திட்டமிட்டவாறு சிங்கப்பூரில் உச்சிமாநாடு நடைபெற ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருவதாக வாஷிங்கடனில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் ட்ரம்பும், கிம்மும் நேரடியாக சந்தித்து பேசுவார்கள்.
கொரிய தீபகற்பத்தில் இருந்து அணு ஆயுதங்களை ஒழிக்க வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் விரும்புகின்றார் என தெரிவித்தார்.

Previous Post Next Post