ரஜினிகாந்த் வீட்டுக்கு கடும் பாதுகாப்பு - Yarl Thinakkural

ரஜினிகாந்த் வீட்டுக்கு கடும் பாதுகாப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ரஜினிகாந்த் ஆவேசமாக பேசியதை அடுத்து சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்றுமுன்தினம் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், சமூக விரோத சக்திகளே தூத்துக்குடி கலவரத்துக்கு முக்கிய காரணம் என்றும் தொடர்ந்து போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் எனவும் ஆவேசமாக பதிலளித்தார். ரஜினிகாந்தின் கருத்துக்கு எதிராக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன்பும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
75இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரஜினி வீடு அமைந்துள்ள வீதியால் செல்லும் மக்கள் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

Previous Post Next Post