குதிக்கால் காலணியால் பலியான குழந்தை - Yarl Thinakkural

குதிக்கால் காலணியால் பலியான குழந்தை


மும்பையில் உயர் குதிக்கால் காலணி (ஹீல்ஸ்) அணிந்திருந்த பெண் தடுக்கி விழுந்ததில் அவரது கையிலிருந்து தவறி விழுந்த 6மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மும்பையின் கல்யாண் பகுதியில் நடந்த திருமண நிகழ்வில் கலந்து கொள்ள பெமிதா ஷேக் என்ற இளம் பெண் தனது கைக்குழந்தையுடன் சென்றிருந்தார்.
அவர் மிக உயரமான குதிக்கால் காலணி (ஹீல்ஸ்) அணிந்திருந்த நிலையில், நடக்கும் போது தடுக்கி விழுந்துள்ளார். அப்போது குதிக்கால் காலணி தடுக்கி நிலை தடுமாறி அவர் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். பெமிதாவிற்கு தலையில் சிறியளவில் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் 6மாத குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இருவரையும் மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Previous Post Next Post