ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் -பன்னீர்செல்வம் உறுதி- - Yarl Thinakkural

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் -பன்னீர்செல்வம் உறுதி-ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற பொதுமக்களின் முக்கிய கோரிக்கைக்கு ஏற்ப, தற்போது அந்த ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நிரந்தரமாக மூடுவதற்குரிய நடவடிக்கைகளை தமிழக அரசு நிச்சயம் எடுக்கும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்து
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தூத்துக்குடியில் நடைபெற்ற இத்துயர சம்பவம் அனைவரது நெஞ்சையும் உலுக்குவதாக அமைந்துள்ளது. தமிழக அரசின் சார்பாக ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் அந்த ஆலை மூடப்பட்டது. அதனை எதிர்த்து ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் ஆலையை திறக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து அப்போதையை முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஆலையின் உரிமத்தை புதுப்பிக்க கடந்த ஏப்ரல் மாதம் ஆலை நிர்வாகம் விண்ணப்பித்த போது அதற்கு தமிழக அரசு மறுத்து விட்டது. எனவே அந்த ஆலை மூடப்பட்டது.
ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற பொதுமக்களின் முக்கிய கோரிக்கைக்கு ஏற்ப, தற்போது அந்த ஆலை மூடப்பட்டுள்ளது. நிரந்தரமாக மூடுவதற்குரிய நடவடிக்கைகளை தமிழக அரசு நிச்சயம் எடுக்கும் என தெரிவித்தார்.
Previous Post Next Post