அணு ஆயுத பரிசோதனை தளத்தை நிர்மூலமாக்கிய வடகொரியா - Yarl Thinakkural

அணு ஆயுத பரிசோதனை தளத்தை நிர்மூலமாக்கிய வடகொரியா



வடகொரியாவின் வடகிழக்கில் மண்ட்டாப் மலைப்பகுதியிலுள்ள புங்யேரி பகுதியில் இருந்த அணு குண்டு பரிசோதனை மையத்தை வடகொரியா அரசு நேற்று நிர்மூலமாக்கியுள்ளது.
ஏவுகணைகளை வைத்து உலகை மிரட்டி வரும் வடகொரியா, தன்வசம் வைத்துள்ள அணு ஆயுதங்களை தங்களிடம் கொடுத்தால் வாங்கிகொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது.இந்நிலையில் வடகொரியாவின் வடகிழக்கில் மண்ட்டாப் மலைப்பகுதியில் உள்ள புங்யே-ரி பகுதியில் அந்நாடு அணு குண்டு பரிசோதனை நடத்தும் மையத்தையும், இதற்காக மலைகளை குடைந்து வெட்டப்பட்ட இரகசிய சுரங்கங்களையும் நிர்மூலமாக்கி மூடிவிட வடகொரியா அரசு முடிவெடுத்தது.
இதைதொடர்ந்து அணு குண்டு பரிசோதனை மையம் தகர்க்கப்படுவதை நேரில் வந்து பார்க்குமாறு உலகின் முக்கிய ஊடகங்களுக்கு வடகொரியா அரசு அழைப்பு விடுத்திருந்தது. நேற்று அந்த இடமும், சுரங்கங்களும் தகர்க்கப்பட்ட காட்சிகளை ஊடகங்கள் வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளன.
Previous Post Next Post