நிற்பதா? இருப்பதா? இந்நாள்-முன்னாள் முதல்வர்கள் மோதல் - Yarl Thinakkural

நிற்பதா? இருப்பதா? இந்நாள்-முன்னாள் முதல்வர்கள் மோதல்யாழ்.மாநகர சபை மாண்பைப் பேணுவது தொடர்பில் சபையின் முன்னாள் இந்நாள் முதல்வர்கள்  இடையே நேற்று வாக்குவாதம் நடைபெற்றது. சபை நடவடிக்கையின் போது கருத்துக்களை வெளியிடும் உறுப்பினர்கள் அமர்திருக்க முடியுமா? எழுந்து நிற்க வேண்டுமா? என்பது தொடர்பிலேயே இந்த வாக்குவாதம் நடந்தது.
முன்னாள் முதல்வரும் சபை உறுப்பினருமான திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா நேற்றைய அமர்வில் இருக்கையில் அமர்ந்தவாறே சபையில் பேசினார்.
இதன்போது சபையின் மாண்புகளின் அடிப்படையில் அமர்ந்திருந்து கருத்துக்களை வழங்க முடியாது என சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட்  தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த யோகேஸ்வரி, தனது காலில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் எழுந்து நின்று பேச முடியாது என்றார்.
ஆனால் இவ்வாறான மருத்துவ தேவை இருப்பின் அதற்கான சான்றிதழ் சபைக்கு உரிய முறையில் சமர்ப்பிக்கப்பட்டு, சபையின் அனுமதி பெறப்பட வேண்டும் என முதல்வர் கூறினார்.
இதனையடுத்து உறுப்பினர் ஜோகேஸ்வரி தனது கைத்தொலைபேசியில் சேமிக்கப்பட்டிருந்த மருத்துவ சான்றிதழை முதல்வருக்கு காண்பித்து தனது பக்க நியாயம் தொடர்பில் வாதிட்டார்.
வாக்குவாரத்தின் இறுதியில் சபை மாண்பை மீறும் வகையில் உறுப்பினர்கள் அமர்ந்திருந்து கருத்துக்களை வெளியிட முடியாது. அமர்திருப்பதற்கு உடல் ரீதியான தேவைகள் இருப்பின் அதற்கான மருத்துவ அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, அனுமதி பெறப்பட வேண்டும். இல்லையேல் சபையில் கருத்துக்களை தெரிவிக்க முடியாது என முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் உறுதியாகத் தெரிவித்தார்.
எனினும் இருக்கையில் அமர்ந்தவாறே முதல்வருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் உறுப்பினர் ஜோகேஸ்வரி பற்குணராஜா.  நேற்றைய சபை அமர்வு முடியும் வரை அமர்ந்திருந்தே தனது கருத்துக்களை சபையில் வெளியிட்டார்.
Previous Post Next Post