மலேசிய முன்னாள் பிரதமர் விடுதலை - Yarl Thinakkural

மலேசிய முன்னாள் பிரதமர் விடுதலை


ஓரின சேர்க்கை மற்றும் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராகிம் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
மலேசிய முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராகிம். ஓரின சேர்க்கை மற்றும் ஊழல் வழக்கில் கடந்த 1998ஆம் ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அன்வர் மறுத்தார். அவரது ஆதரவாளர்களும் எதிர்த்து வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த மலேசிய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி அடைந்தது. அன்வர் இப்ராஹிமின் மக்கள் நீதி கட்சி மற்றும் பிஎச் கட்சி கூட்டணி வெற்றி பெற்றது.
எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதால் 92வயதான மகாதீர் முகமது பிரதமரானார்.
எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த அன்வரை விடுதலை செய்ய வேண்டும் என மலேசிய மன்னரிடம் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய மன்னர் உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து அவர் இன்று விடுதலை செய்யப்பட்டார். அன்வருக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், விடுதலை செய்யப்பட்டதையடுத்து அங்கிருந்தே அரண்மனைக்கு புறப்பட்டு சென்றார்.
Previous Post Next Post