“காலா” திரையிடுவதில் சிக்கல் - Yarl Thinakkural

“காலா” திரையிடுவதில் சிக்கல்


காவிரி விடயத்தில் கர்நாடகாவுக்கு எதிராக நடிகர் ரஜினி பேசியமையால் அவர் நடித்துள்ள காலா திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என கன்னட திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது.
ரஜினி நடித்துள்ள காலா படம் எதிர்வரும் ஜூன் 7ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் காலா திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என கன்னட திரைப்பட வர்த்தகசபை தெரிவித்துள்ளது.
காலா திரைப்படத்தை கர்நாடகவில் திரையிடுவது தொடர்பாக, கன்னட திரைப்பட வர்த்தகசபை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் காவிரி நதி நீர் விடயம் தொடர்பாக நடிகர் ரஜினி, கர்நாடகாவுக்கு எதிராக பேசியுள்ளார். இதனால் காலா திரைப்படத்தை வெளியிட்டால் மக்கள் மத்தியில் பிரச்சினை எழும் என்று கூட்டத்தில் பலரும் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து கன்னட திரைப்பட வர்த்தக சபை தலைவர் சா.ரா.கோவிந்த் கூறுகையில், காவிரி விடயத்தில் கர்நாடகாவுக்கு எதிராக ரஜினி பேசியிருப்பது தவறு. அவர் மன்னிப்பு கேட்டாலும் காலா திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார்.

Previous Post Next Post