சசிகலா எனது சகோதரி இல்லை -திவாகரன் ஆவேசம்- - Yarl Thinakkural

சசிகலா எனது சகோதரி இல்லை -திவாகரன் ஆவேசம்-

சசிகலா எனது சகோதரி இல்லை. இனிமேல் சசிகலாவிடம் பேசுவதில்லை என்றும் அவரின் பெயர் புகைப்படத்தை தன் கட்சியில் பயன்படுத்த மாட்டேன் என்றும் திவாகரன் தெரிவித்துள்ளார்.
தினகரன்- திவாகரன் இடையே மோதல் உச்சமடைந்துள்ளது. இந்நிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் சில தினங்களுக்கு முன்னர் சசிகலாவின் பெயரையோ படத்தையோ திவாகரன் பயன்படுத்த கூடாது என்றும் உடன்பிறந்த சகோதரி என சொல்லக்கூடாது எனவும் திவாகரனுக்கும் நோட்டீஸ் அனுப்பினார்.
இந்நிலையில் மன்னார்குடியில் இன்று அம்மா அணியின் ஆலோசனை கூட்டம் திவாகரன் தலைமையில் நடைபெற்றது. அங்கு செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், இனி எங்கள் அணியில் சசிகலாவின் பெயர் புகைப்படங்கள் இருக்காது. எங்களுக்கு அண்ணா, தலைவர், அம்மா பெயர் மட்டும் போதும். அதை வைத்து நாங்கள் எங்களின் அணியை நிலை நிறுத்துவோம்.
இனி சசிகலாவிடம் பேசமாட்டேன். பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பவர்களை யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். அரசியல் ரீதியாக மட்டுமே அவரைப் பற்றிப் பேசுவேன். இன்னும் தேர்தல் காலங்களில் கடுமையாக விமர்சனம் செய்வேன். மற்றபடி தனிப்பட்ட முறையில் அவரை சந்திக்க போவதுமில்லை. பேசப்போவதுமில்லை என தெரிவித்தார்.                                   

Previous Post Next Post