பீனிக்ஸ் பறவை வடிவில் ஜெயலலிதா நினைவு மண்டபம் - Yarl Thinakkural

பீனிக்ஸ் பறவை வடிவில் ஜெயலலிதா நினைவு மண்டபம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை இடம்பெற்றது. இதில் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.
ரூ.50கோடியே 80 இலட்சம் செலவில் பல்வேறு கலைநயங்கள் கொண்ட வேலைபாடுகளுடன் கூடிய நினைவு மண்டபத்தை அமைக்க தமிழக அரசு முடிவு செய்ததுள்ளது. இந்த நினைவு மண்டபமானது பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்படவுள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் திகதி மரணமடைந்தார்.
 அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் நினைவு மண்டபம் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. நினைவிடம் அமைப்பதற்கான வரைபடம் தயாரிக்கும் பணி முடிவடைந்தது.
இதை தொடர்ந்து நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு சார்பில் விலை மனுக்கோரல் விடப்பட்டு இறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 15ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைக்க ரூ.50.80கோடி ஒதுக்கப்பட்டது.
நினைவு மண்டப கட்டுமானப்பணிகளை எதிர்வரும் நவம்பர் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் 5ஆம் திகதி  ஜெயலலிதாவின் 2ஆம் ஆண்டு நினைவு தினம் வருகிறது. அன்று நினைவு மண்டபத்தை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விட திட்டமிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post