இரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய் - Yarl Thinakkural

இரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்

நடிகர் விஜய் தன்னுடைய கேரள இரசிகர்களை சென்னையில் நேற்று சந்தித்தார். விஜய்-இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இது விஜய் நடிக்கும் 62ஆவது படம். மெர்சல் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் நடிக்கும் படத்துக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் தன்னுடைய ரசிகர்களை சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் விஜய், நேற்று கேரள மாநிலம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள தன்னுடைய ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். சென்னையிலுள்ள பனையூரில் இச்சந்திப்பு நடைபெற்றது.
Previous Post Next Post