காதலனை கரம்பிடிக்கும் முகேஷ் அம்பானி மகள் - Yarl Thinakkural

காதலனை கரம்பிடிக்கும் முகேஷ் அம்பானி மகள்


இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, முன்னணி விற்பனை முகவர் நிறுவனமான பிரமோல் நிறுவன தொழிலதிபரின் மகனை திருமணம் செய்யவுள்ளார்.
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, பிரபல விற்பனை முகவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் பிரமோலை காதலித்து வருகிறார்.
நெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவரும் அண்மைக் காலமாக காதலித்து வருவதாகவும், இவர்களது காதலுக்கு இரு தரப்பு பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களது திருமணமும் டிசம்பரில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனந்த் பிரமோலின் தந்தையான அஜய் பிரமோல் மிகப்பெரிய தொழிலதிபர். நாட்டின் முன்னணி காணி விற்றல், வாங்குதல் நிறுவனமான பிரமோல் ரியாலிட்டி நிறுவனத்தை உருவாக்கியவர் ஆவார். ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் படித்த ஆனந்த், தனது தந்தையின் நிறுவனத்தை கவனித்து வருவதுடன் புதிதாக இரண்டு நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். பிரமோல் ரியாலிட்டி நிறுவனம் தற்போது மிகப்பெரிய தொழில் நிறுவனமாக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post